Reservation குறித்து மூன்று கேள்விகள்
'தலைப்பு' ஊக்கம்: அன்புக்குரிய 'பெனாத்தலார்'
1. பிற்படுத்தப்பட்டவரில், Creamy Layer வகையினர் சிறிய சதவிகிதமே இருக்கையில், அவர்களை 27% உயர்கல்வியில் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைப்பதற்கு, சிலர் ஏன் ஆரவார எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ? இதற்கு சுயநலம் தவிர வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா ? கம்யூனிஸ்ட்கள் Creamy layer-ஐ விலக்கி வைப்பதற்கு ஆதரவாக குரல் எழுப்பியது, இது குறித்து மத்திய அரசுக்கு சரியான செய்தியை அனுப்பியிருக்கும் என்று நம்பலாம்.
2. திரு.ராமதாஸ், Creamy Layer-க்கு ஆதரவாக, ஒருவர் நூறு பன்றிகள் வைத்திருந்து, ஆண்டுக்கு ஒரு லட்சம் சம்பாதித்தும், அவர் குடும்பத்தில் ஒருவர் கூட படிக்காமல் இருப்பதற்கான சாத்தியத்தை (இந்த வார குமுதம் பேட்டியில்!) எடுத்துக் காட்டி, பொருளாதார அளவுகோல் கூடாது என்கிறார் ! நல்ல உதாரணம் தான் ! இதற்கு எதிர்மறை லாஜிக்கின்படி, பொருளாதார பற்றாக்குறையினால், தகுதியிருந்தும் படிக்க வழியில்லாத முற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீட்டில் ஒரு சிறு சதவிகிதம் தருவதில் என்ன தவறு ?
3. தொடக்கக் கல்வியில் பிற்படுத்தப்பட்டவருக்கு 25% சதவிகித இடஒதுக்கீடு என்பதை கிடப்பில் போட்டு விட்டு, உயர்கல்வியில் மட்டும் இடஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வரும் இந்த முயற்சி "ஓட்டு வங்கி அரசியல்" அன்றி, வேறென்னவாக இருக்க முடியும் ?
என்றென்றும் அன்புடன்
பாலா
14 மறுமொழிகள்:
எல்லாம் சரி தான்... விடையெல்லாம் தெரிஞ்சும் அதை வெளில சொல்ல முடியாம முழு முட்டையை சோத்துப் பருக்கைக்குள்ள மறைக்கிற கும்பல்கிட்ட கேள்வி கேட்கிறீங்களே?!
1. இப்பவே creamy layer பத்தி யோசிக்கணுமான்னு தெரியலை. உங்க லாஜிக் படி அது சிறிய சதவிகிதம்னா அதை கண்டுக்காமலேயே விட்றலாம்!!!. இந்தமாதிரி உள்பிரிவு வெளிபிரிவுன்னு பேசுறது இதை அமல்படுத்தறதை தள்ளி போடப்படுற ஒரு உத்தியாதான் பாக்க முடியும். அதனால அதைத்தவிர வேற எந்த சுயநலமும் இருக்க முடியாது. ராமதாஸ் இதை சரியா தான் சொல்லியிருக்காரு. அதைத்தான் மக்க இங்க சமூக நீதி சமூக நீதின்னு அடிச்சிக்கிறாங்க. எப்ப ஒரு மனுசனை அவனோட சாதியைத் தாண்டி, அவனோட நடத்தையை வைச்சோ, அவனோட பதவிய வைச்சோ எடபோடப்போறமோ அப்ப எல்லாத்தைப் பத்தியும் யோசிக்கலாம்.
2. நீங்க பொருளாதார முன்னேற்றத்தையும் சமூக முன்னேற்றத்தையும் ஒன்னா பாக்கறீங்கன்னு நினைக்கிறேன். பொருளாதார அளவுல பின்னாடி இருக்கற ஒருத்தனுக்கு தேவை பொருளாதார உதவி மட்டும் தான். ஆனா சமூக அளவுல பின்னாடி இருக்கறவனுக்கு, மனுசன்ற அங்கீகாரமே மட்டுப் படுத்தப் பட்ட அளவுல இருக்கற ஒருத்தனுக்கு எல்லாமே செய்ய வேண்டியதிருக்கு.
3. தொடக்க கல்வியிலயும் இடஒதுக்கீட்டை கொண்டு வரணும்ன்ற உங்களோட அக்கறையை நான் பாராட்டுறேன்.
அப்டியே இந்த கேள்விகளோட சேத்து இடஒதுக்கீட்டை ஒட்டு மொத்தமா எதிர்க்கறவுங்களுக்கும் ரெண்டு மூணு கேள்வி கேட்ருக்கலாம். உதாரணத்துக்கு,
சுதந்திரம் வாங்கி 50 வருசம் ஆகிப் போச்சி. ஏன் இன்னும் பிற்படுத்த, தாழ்த்தப் பட்டவங்களால முன்னேறி வரமுடியலை. அவங்க முன்னேறுறதுக்காக கொண்டு வர்ற இடஒதுக்கீட்டையும் ஏன் கேள்வி கேட்டு தடுக்கணும். இதை சுயநலம்னு சொல்லாம என்ன சொல்றது..
அப்புறமா சங்கரபாண்டி என்னோட பதிவுல கேட்டிருக்கற மாதிரி விமானம், பேருந்து, இரயில், திரையரங்கு இன்னும் எங்கல்லாம் இட ஒதுக்கீடு இருக்கோ அங்கல்லாம் இட ஒதுக்கீட்டை ஒழிச்சுட்டு, தகுதியடிப்படையில இடம் கொடுக்கலாமா? இங்க தகுதின்னா என்னங்க? - யாருக்கெல்லாம் முண்டி அடிச்சி பலசாலியா போய் ஏறி உக்காந்துக்க முடியுமோ அவங்கல்லாம் தகுதி அடிப்படையில் ஏறி உக்காந்துக்கட்டும். உடல் பலமும் தகுதிதானே?
Welcome, மாயவரத்தான் :)
தொடக்க கல்வியில் இட ஒதுக்கீடா? அப்படீன்னா என்ன பாலா சார்? தொடக்க கல்வி படிக்க முடியாம இருக்க காரணம்...வறுமையும் சமூக சூழலும் அப்படீன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்...அங்கையும் இடமில்லாமதான் பிற்படுத்தப் பட்டோரும் தலித்துகளும் படிப்பதில்லை என்பது உதைக்கிறதே ?
ராமதாஸ் சொன்ன உதாரணம் பத்தி எனக்கு தெரியாது ..ஆனால் உங்களது கேள்விக்கு நான் ஒரு உதாரணம் மூலம் விளக்க முயல்கிறேன்... கூட்டத்தில் சாமி கும்பிட போட்டி...அப்போது உடல் ஊனமுற்ற ஒருவர் ஊன்றுகோலின் துணையுடன் வந்தலும் அவரால் போட்டி போட முடியாது...அதனால் அவர்களுக்காக மற்றவர்களை கொஞ்சம் விலக்கி வழி விட செய்வதுதான் இட ஒதுக்கீடு...இந்த சமுதாயத்தில் பிற்படுத்தப்படல் அல்லது தாழ்த்தப் படல் என்பது அந்த மக்களை ஓர் ஊனம் போல் பாதித்திருக்கிறது...அது களையப்படும் வரை அவர்களுக்கு கல்விக் கடவுளை தரிசிக்க இட ஒதுக்கீடு என்னும் உதவிக்கரம் தேவை...பணம் என்னும் ஊன்றுகோலால் மட்டும் அவர்களால் போராட முடியாது...முற்பட்டு நிற்கும் சாதியில்(முற்படுத்தப்பட்ட என்பது சரியா ?ஆம் எனில் யாரால் முற்படுத்தப்பட்ட?)வந்த ஒருவருக்கு அந்த (சமூக) ஊனம் இல்லாததால் அவரால் போரட முடியும்.. வேண்டுமானால் econamically backward -ஆக இருக்கும் அவருக்கு scholership போல பண உதவி கிடைக்க வேண்டும் என போராடுவது சரியாக இருக்கும்...but reservation in employment & education is something else...not only related to ecconomic condition but also related to social upliftment & recognition சம்பந்தப்பட்டது...மேலும் ராமதாஸின் பன்றி உதாரணத்தை வைத்தே விளக்க முயல்கிறேன்..பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் 100 பன்றிகளை மேய்த்து கொண்டு பணக்காரராக இருப்பதாக கொள்வோம்..அவரது பையன் படிக்கப் போய் அங்கு சூழ்நிலை சரியில்லாததாலோ அல்லது படிப்பு சரிவர வராத நிலையோ ஏற்பட்டால் அவனது தகப்பனார் அந்தப் பையனை without batting an eye lid பன்னி மேய்க்க அனுப்பி விடுவார்..இதன் சமுதாய பின்விளைவுகள் தெரியாமல் (படிக்கப் போக வேண்டாம் என்பதனால் ஏற்பட்ட கற்பனை சந்தோஷத்துடன்) அந்தப் பய்யனும் அத்தொழில் பார்க்க சென்று விடுவான்...இதே முற்பட்டு நிற்கும் சமுதாயத்தில் அந்தப் பையன் படிக்கவில்லை எனில் அவன் அப்பா பன்னி மேய்க்கப் போ என திட்டலாம்...ஆனால் லாபமுள்ள தொழில் என்று தெரிந்தால் கூட பன்னி(ஒன்றோ,பத்தோ,நூறோ)வாங்கிக் கொடுத்து தன் பையனை மேய்க்க சொல்வாரா? இந்த இரண்டு இடங்களிலும் புற சூழல்கள் வேறானவை...இதெல்லாம் கணக்கில் எடுக்காமல் இட ஒதுக்கீட்டு பிரச்சனைக்கு தீர்வெல்லாம் பகல்கனவு..மற்றும் எனது இடம் பறி போகிறதே என emotional ஆக அணுகக் கூடாது...ஆனால் இந்த so called அரசியல்வாதிகளால் இதற்கு தீர்வு கொண்டு வர முடியாது/ விரும்பவும் மாட்டார்கள்...இதைப் பற்றிய எனது ஒரு கண்ணோட்டம் குழலி என்பவரின் பதிவிலும் பின்னூட்டமாக... பிரசுரமானால் படியுங்கள்...கருத்தும் சொல்லலாம்...
நான் இவரது பின்னூட்டத்துக்கு மட்டும் பதிலளிப்பேன்...மற்றவர்கள் தயவு செய்து என் பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் இடவேண்டாம் ......
வேலைபளு காரணமாக எப்போதாவது சமயம் இருப்பின் மனநிலை இருப்பின் பதிலளிப்பேன்...நான் எதிலாவது போய் பின் முன்னூட்டாமெல்லாம் வைப்பேன் ஆனால் என்னக்கு வந்த பின்னூட்டத்துக்கு பதிலளிப்பதை ஒரு மரியாதைக்கு கூட நினைத்து பார்க்க மாட்டேன் என இணையத்தில் சொல்லி வரும் மூத்த / முத்திப்போன பதிவர்கள் மாதிரி சொல்லமாட்டேன்..
எனக்கு வேலை வெட்டி கிடையாது ...யாரு எழுதினாலும் என்ன ஏதுன்னுட்டு ஒடனே பின்னூட்டம் வைப்பேன் என உரித்து கூறுகிறேன்.:)
(அந்த மூத்த பதிவர்கள் யாரா...இதப் பார்ரா..எனக்கே ஆப்பா?)
விசித்திரகுப்தன், முனியாண்டி,
தங்கள் விரிவான கருத்துக்களுக்கு நன்றி ! பிறகு, விளக்கமாக எழுதுகிறேன்.
நான் சொன்னது
///வேலைபளு காரணமாக எப்போதாவது சமயம் இருப்பின் மனநிலை இருப்பின் பதிலளிப்பேன்.....என இணையத்தில் சொல்லி வரும் மூத்த / முத்திப்போன பதிவர்கள் மாதிரி ...///
பாலா சொன்னது
/////பிறகு, விளக்கமாக எழுதுகிறேன். ////
ஒருவேளை நான் சொன்னது பாலாவைத்தானோ ?
பாலா :))))) சும்மா தமாஷுக்கு...கோவிக்க வேண்டாம் :)))
ஐம்பது வருஷத்துக்கே இப்படி மூக்க சிந்தனால் எப்படி? ஆயிராயிய வருஷமா அனுபவிச்சதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கையவிட்டு போகும் போது அழுகாச்சி அழுகாச்சியா தான் இருக்கும்.
சரி சரி இங்க நேரத்தை வீணாக்காம ஆகமவிதி படிக்கபோகலாம் வாங்க. சாயரச்சை வேளைக்கு பூசாரி (protocol layer) ஆகிடலாம். இரெண்டு வருமானம் இருந்தால் தான், இந்த காலத்துக்கு நல்லது.
மற்றபடி பாலா எப்படி இருக்குறீங்க? சவுக்கியமா இருக்கிங்களா?
முனியாண்டி,
//1. இப்பவே creamy layer பத்தி யோசிக்கணுமான்னு தெரியலை. உங்க லாஜிக் படி அது சிறிய சதவிகிதம்னா அதை கண்டுக்காமலேயே விட்றலாம்!!!. இந்தமாதிரி உள்பிரிவு வெளிபிரிவுன்னு பேசுறது இதை அமல்படுத்தறதை தள்ளி போடப்படுற ஒரு உத்தியாதான் பாக்க முடியும். அதனால அதைத்தவிர வேற எந்த சுயநலமும் இருக்க முடியாது.
//
creamy layer-ஐ விலக்குவதன் மூலம், ஒரு சில deserving பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கு உதவ முடியும் என்றால், அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதே! முக்கியமாக, அரசியல்வாதிகளையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்பது என் கருத்து !
//2. நீங்க பொருளாதார முன்னேற்றத்தையும் சமூக முன்னேற்றத்தையும் ஒன்னா பாக்கறீங்கன்னு நினைக்கிறேன். பொருளாதார அளவுல பின்னாடி இருக்கற ஒருத்தனுக்கு தேவை பொருளாதார உதவி மட்டும் தான்.
//
பொருளாதாரம் சரியில்லாததால், ஓரிரண்டு மதிப்பெண்கள் குறைவாக வாங்கிய முற்பட்ட வகுப்பு மாணவன் நிராகரிக்கப்படக் கூடாது என்பது என் கருத்து.
//3. தொடக்க கல்வியிலயும் இடஒதுக்கீட்டை கொண்டு வரணும்ன்ற உங்களோட அக்கறையை நான் பாராட்டுறேன்.
//
நன்றி
//சுதந்திரம் வாங்கி 50 வருசம் ஆகிப் போச்சி. ஏன் இன்னும் பிற்படுத்த, தாழ்த்தப் பட்டவங்களால முன்னேறி வரமுடியலை. அவங்க முன்னேறுறதுக்காக கொண்டு வர்ற இடஒதுக்கீட்டையும் ஏன் கேள்வி கேட்டு தடுக்கணும். இதை சுயநலம்னு சொல்லாம என்ன சொல்றது..
//
இதில் ஓரளவு உண்மை உள்ளது. Creamy layer தொடந்து இடஒதுக்கீட்டை அனுபவிப்பதும் இதற்கு ஒரு காரணம்.
விசித்திரகுப்தன்,
//தொடக்க கல்வியில் இட ஒதுக்கீடா? அப்படீன்னா என்ன பாலா சார்? தொடக்க கல்வி படிக்க முடியாம இருக்க காரணம்...வறுமையும் சமூக சூழலும் அப்படீன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்...அங்கையும் இடமில்லாமதான் பிற்படுத்தப் பட்டோரும் தலித்துகளும் படிப்பதில்லை என்பது உதைக்கிறதே ?
//
நான் கூறுவது, நல்ல தனியார் பள்ளிகளிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது! தற்போது, தில்லியில் (அரசிடமிருந்து சலுகை விலையில் நிலம் பெற்று கட்டடம் கட்டிய) சில பள்ளிகளில் இந்த இடஒதுக்கீடு (சட்டம் இல்லாமலேயே) நடைமுறையில் உள்ளது. சென்னையிலும், DAV பள்ளியில், சமூகத்தில் பின் தங்கிய குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு (எவ்வளவு சதவிகிதம் என்று தெரியாது) உண்டு.
//முற்பட்டு நிற்கும் சாதியில்(முற்படுத்தப்பட்ட என்பது சரியா ?ஆம் எனில் யாரால் முற்படுத்தப்பட்ட?)வந்த ஒருவருக்கு அந்த (சமூக) ஊனம் இல்லாததால் அவரால் போரட முடியும்.. வேண்டுமானால் econamically backward -ஆக இருக்கும் அவருக்கு scholership போல பண உதவி கிடைக்க வேண்டும் என போராடுவது சரியாக இருக்கும்...but reservation in employment & education is something else...not only related to ecconomic condition but also related to social upliftment & recognition சம்பந்தப்பட்டது...
//
நீங்கள் சொல்லும் recognition மேட்டர் சரி தான். ஆனால், பொதுவாக, பணக்காரர்களுக்கு சாதி கிடையாது, தேவையில்லை என்பதே என் கருத்து !
//நான் இவரது பின்னூட்டத்துக்கு மட்டும் பதிலளிப்பேன்...மற்றவர்கள் தயவு செய்து என் பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் இடவேண்டாம் ......
வேலைபளு காரணமாக எப்போதாவது சமயம் இருப்பின் மனநிலை இருப்பின் பதிலளிப்பேன்...நான் எதிலாவது போய் பின் முன்னூட்டாமெல்லாம் வைப்பேன் ஆனால் என்னக்கு வந்த பின்னூட்டத்துக்கு பதிலளிப்பதை ஒரு மரியாதைக்கு கூட நினைத்து பார்க்க மாட்டேன் என இணையத்தில் சொல்லி வரும் மூத்த / முத்திப்போன பதிவர்கள் மாதிரி சொல்லமாட்டேன்..
எனக்கு வேலை வெட்டி கிடையாது ...யாரு எழுதினாலும் என்ன ஏதுன்னுட்டு ஒடனே பின்னூட்டம் வைப்பேன் என உரித்து கூறுகிறேன்.:)
(அந்த மூத்த பதிவர்கள் யாரா...இதப் பார்ரா..எனக்கே ஆப்பா?)
//
உங்களுக்கு குசும்பு அதிகம் என்று நினைக்கிறேன் ;-) உங்களுக்கு நேரம் சரியில்லாத பட்சத்தில், நீங்கள் டின் கட்டப்படும் / ஆப்படிக்கப்படும் சாத்தியம் உள்ளது :)
என்றென்றும் அன்புடன்
பாலா
//ஒருவேளை நான் சொன்னது பாலாவைத்தானோ ?
பாலா :))))) சும்மா தமாஷுக்கு...கோவிக்க வேண்டாம் :)))
//
Good one, I enjoyed it, if fact :)
காஞ்சி பிலிம்ஸ்,
//மற்றபடி பாலா எப்படி இருக்குறீங்க? சவுக்கியமா இருக்கிங்களா?
//
வாங்க, வாங்க ! எங்க ஆளையே காணோம், கொஞ்ச நாளா ? நலம் தானே ?
என்றென்றும் அன்புடன்
பாலா
உங்களது கேள்வியில் உள்ள நியாயத்தை ஒத்துக்கொள்கிறேன்.ஆனால்,விசித்திரகுப்தன் சொல்வதுபோல் சமூக அந்தஸ்து என்பது வேறு,பொருளாதார அந்தஸ்து என்பது வேறு.கிரிம்லேயரை வலியுறுத்தும் பலரும் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
மிதக்கும் வெளி,
நன்றி !
//பொருளாதாரம் சரியில்லாததால், ஓரிரண்டு மதிப்பெண்கள் குறைவாக வாங்கிய முற்பட்ட வகுப்பு மாணவன் நிராகரிக்கப்படக் கூடாது என்பது என் கருத்து/
இதுக்கு பொருளாதர தீர்வு மட்டும் தானங்க தீர்வா வைக்கப்படணும். இதுல எப்டி இடஒதுக்கீட்டுத் தீர்வு சரியா வரும்னு நினைக்கறீங்க. இது தான் வந்து இடஒதுக்கீட்டோட தேவையவே கேலி பண்ற இடம்.
எனக்கு சுனாமி அப்ப நடந்த கதைகள் தான் ஞாபகம் வருது. எல்லாரும் பாதிக்கப்பட்டவங்களுக்காக பொருட்களை கொண்டு போனப்ப வழியில இருந்தவங்க, நாங்களும் ஏழைகள் தான் எங்களுக்கும் குடுங்கன்னு கேட்டு வம்பு பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதே மாதிரி தான் நீங்க சொல்றதும் இருக்கு.
ஏற்கனவே இன்னும் இவங்களை விட மோசமான சூழ்நிலையில(exposure and facilities) இருக்கற கிராமப்புறத்தில இருக்கறவங்க, அப்புறம் பெண்கள்ன்னு இடஒதுக்கீடு உண்மையிலயே தேவையானவங்க நிறைய பேர் இருக்காங்க.
இன்னும் சொல்லப் போனா ஒரு பொதுவான சூழ்நிலைன்னு ஏற்படும்போது கூட பொருளாதர பிரச்சனைக்கு பொருளாதார தீர்வைத்தான் முன்னாடி வைக்கணும்.
அப்புறம் நீங்க எல்லாத்தையும் சுலபமா தூக்கி Creamy layer மேல போட்டுட்டீங்க.
உங்க லாஜிக் படி Creamy layer தான் எல்லாத்துக்கும் காரணமுன்னா இன்னேரம் உயர்கல்விக் கூடங்கள் எல்லாத்தையும் இவங்க நிரப்பியிருக்கனுமில்லை. ஆனா அந்த மாதிரி எதுவும் தெரியலையே. நான் இருந்த இடத்திலயும் பிற்படுத்தப் பட்டவங்கன்னா அது தமிழ் நாட்ல இருந்து வந்தவங்க மட்டும் தான். மத்த இடத்தில இருந்துன்னா சொல்ல வேண்டிய தேவையே இல்ல. அப்ப இதுக்கு காரணம் என்ன.
இதுக்கு பதிலை ராமதாஸோட பன்னி கதையில தான் தேடணும். இந்த மக்களால இன்னும் தங்களோட குறுகுன வட்டத்தில இருந்து வெளிய வரமுடியலை. அதனால தான் Creamy layer பத்தி இப்பவே யோசிக்க தேவையில்லன்னு சொல்றது.
Creamy layer பத்தி இப்ப பேசுறதே இடஒதுக்கீட்டை எப்டியெல்லாம் குழப்பி அதை இல்லாம பண்ண வைக்கிறதுக்கான ஒரு சின்ன முயற்சி தான்.
அதோட பிரச்சனை எல்லாத்தையும் அரசியல் வாதிங்கமேல போட்டுவிட்டுட்டீங்க. அது உண்மையா பொய்யான்றது ரெண்டாவது பிரச்சனை. ஆனா இப்ப இடஒதுக்கீடே வேணாம்னு எந்த அரசியல்வாதியும் தெருவுக்கு வந்த மாதிரி தெரியலைங்க.
விரும்பியோ விரும்பாமலோ பிற்படுத்தப்பட்டவங்களுக்கு அரசியல்வாதிங்க மட்டும் தான் ஊன்றுகோலா இருக்காங்க. நீங்க சொல்ற அறிவு ஜீவிங்கள்லாம் சுயநலமா மட்டும் தான யோசிக்கறாங்க. அதைத்தான இப்ப எல்லாரும் பாத்துக்கிட்டு இருக்கோம்.
//Creamy layer தொடந்து இடஒதுக்கீட்டை அனுபவிப்பதும் இதற்கு ஒரு காரணம்.
//
பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடாது...
இது தொடர்பான எனது பதிவு இட ஒதுக்கீடு - தலைமுறை தலைமுறையாகவா?
//
//Creamy layer தொடந்து இடஒதுக்கீட்டை அனுபவிப்பதும் இதற்கு ஒரு காரணம்.
//
பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடாது...
//
இது முற்றிலும் பொய் என்பது உங்கள் கருத்து. எனவே விளக்கம் தந்து ஆகப் போவது எதுவுமில்லை.
உங்கள் கருத்துக்கு உடன்படுபவர்களும் இருப்பார்கள். அதே போல், என் கருத்தை ஆதரிப்பவர்களும் இருப்பார்கள்.
மேலும், "அனுபவிப்பதும்" என்று தான் கூறினேன். பின் எதற்கு இந்தப் பாய்ச்சல் ?
Post a Comment